பாடகர் கிரிஷ் பிறந்தநாள்… முன்னணி நடிகைகள் கலந்து கொண்ட இரவு பார்ட்டி.. வெளியான புகைப்படங்கள்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

பாடகர் கிரிஷ் பிறந்தநாள்… முன்னணி நடிகைகள் கலந்து கொண்ட இரவு பார்ட்டி.. வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல்களால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டவர் தான் பாடகர் கிரிஷ். திருச்சியில் பிறந்த இவரின் முழு பெயர் விஜய் பாலகிருஷ்ணன்.

வங்கி ஊழியரான இவரது தந்தைக்கு அமெரிக்காவில் பணியிட மாறுதல் கிடைத்த நிலையில் இவரின் குடும்பம் அமெரிக்காவிற்கு சென்றது.

ஏறத்தாழ பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கு தொடர்ந்த இவர் அங்கு சினிமாவில் நடிப்பதற்கான படிப்பை படித்து முடித்தார்.

பிறகு சென்னை திரும்பிய கிரிஷ் இசையமைப்பாளர் கணேஷ் குமாரின் ஆல்பத்திலும் மேடைகளிலும் பாடிக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கணேஷ்குமார் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இவரது குரல் வளத்தை பற்றி சொல்ல அதன் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது முன்னணி பாடகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 26 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வரும் மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளது பளிச்சிடும் விளக்குகள் பகல் போல காட்டுதே என்ற பாடலில் ஹரிஹரனுடன் சேர்ந்து பாடி தன்னுடைய முதல் பட வாய்ப்பு பெற்றார்.

அடுத்து 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் இன்றும் பலருக்கு பிடித்த உன்னாலே உன்னாலே பாடலை பாடியிருப்பார்.

அடுத்தடுத்து இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. குறிப்பாக காரணமாயிரம் திரைப்படத்தில் இடம்பெற்ற அடியே கொல்லுதே அழகே அல்லுதே பாடலில் அத்தனை வரிகளும் ரசிகர்களை கவர்ந்தன.

இவர் பாடிய பாடல்கள் ஃபிலிம் பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியின் இருதயம் இவர் பெற்றுள்ளார்.

இதனிடையே இவர் நடிகை சங்கீதாவை திருவண்ணாமலையில் வைத்து 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கிரிஷ் நேற்று தனது நண்பர்களுடன் தனது பிறந்த நாள் பார்த்து வைத்து வேற லெவலில் கொண்டாடியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.