LATEST NEWS
சொந்த வாழ்க்கையை வெப் தொடராக்கும் கவர்ச்சி நடிகை சோனா.. இவ்வளவு ட்விஸ்ட் இருக்கா?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சோனா. முதன் முதலில் மிருகம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரஜினியின் குசேலன் திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தன்னுடைய வாழ்க்கை கதையை திரைப்படமாக அல்லது வெப் தொடராக எடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதலில் வெப் தொடராக எடுத்துவிட்டு அதன் பிறகு சினிமா படமாக எடுக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். அதன்படி வெப் தொடருக்கு ஸ்மோக்கிங் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொடரை சோனாவே டைரக்ட் செய்ய உள்ளார். சோனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகை சோனா ஏற்கனவே திரையுலகில் சில கசப்பான அனுபவங்களை எதிர்கொண்ட நிலையில் அந்த விஷயங்களையும் வெப் தொடரில் வெளிப்படுத்த இருப்பதால் பரபரப்பான எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.