1000 மட்டும் போதும்.. அதிரடி ஆஃபருடன் புது தொழிலை ஆரம்பித்த சன்னி லியோன் .. - cinefeeds
Connect with us

LATEST NEWS

1000 மட்டும் போதும்.. அதிரடி ஆஃபருடன் புது தொழிலை ஆரம்பித்த சன்னி லியோன் ..

Published

on

 பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியில் முன்னணி நடிகையாக  வலம் வரும் நடிகை சன்னி லியோன்; தற்போது இவர் புதிய பிசினஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதற்காக இவரின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பாலிவுட் படங்களில் படு பிஸியாக நடித்து வரும் நடிகை சன்னி லியோன் தன்னுடைய கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதற்கு மறந்ததே இல்லை.
நடிகை சன்னி லியோன் 2013 ல் ஹிந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றார்.

Advertisement

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் சன்னி லியோனுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. இதில்  சில படங்களில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்தும் அதிர்ச்சியை  கொடுத்துள்ளார். நடிகை சன்னி லியோன் தமிழில் வடகறி திரைப்படத்தில் ஜெய்க்கு  ஜோடியாக ஐட்டம் சாங்கில் ஆடியுள்ளார். இதனை அடுத்து ஓ மை கோஸ்ட், வீரமாதேவி, தீ இவன்  போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,  மராத்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை சன்னி லியோன் கைவசம் நிறைய படங்கள் இருந்தாலும் இதனால் வரும் வருமானத்தை புதிய பிசினஸில் இன்வெஸ்ட் செய்துள்ளார்.

Advertisement

அதாவது சன்னி லியோன் ‘Chica local’ என்கிற ஹோட்டல் பிஸ்னஸ் ஒன்றை துவங்கியுள்ளார். பலவகையான வெரைட்டி சாப்பாடுகள் இங்கு கிடைக்கும் என்றும், ஒரு ஆளுக்கு 1000 ரூபாய் செலுத்தினால், இங்கு உள்ள அனைத்து உணவுகளையும் அன்லிமிட்டடாக சாப்பிடமுடியும் என தெரிவித்துள்ளார். இதற்காக சன்னி லியோன்  ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement