GALLERY
இளைஞர்களின் கனவு கன்னி த்ரிஷா… சின்ன வயசுல எப்படி இருந்தாங்க தெரியுமா..? யாரும் பார்க்காத Childhood photos இதோ..!!

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் த்ரிஷா முதன்முதலில் லேசா லேசா படத்தில் நடித்தார். அந்த படம் தாமதமாக 2003-இல் வெளியானது. இதற்கிடையே த்ரிஷா சூர்யா உடன் நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் 2002-ல் வெளியானது.

#image_title
அதன் பிறகு த்ரிஷாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது. நடிகர் விக்ரமுடன் சாமி, ஸ்ரீகாந்த்துடன் மனசெல்லாம், தருணுடன் எனக்கு 20 உனக்கு 18 போன்ற படங்களில் திரிஷா நடித்துள்ளார்.

#image_title
கடந்த 2003-ஆம் ஆண்டு த்ரிஷா நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து விஜயுடன் 2004-ஆம் ஆண்டு கில்லி திரைப்படத்தில் திரிஷா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

#image_title
அதன்பிறகு விஜயுடன் திருப்பாச்சி படத்தில் நடித்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு திரிஷா சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

#image_title
அதுவரை கில்லி தனலட்சுமி என அழைக்கப்பட்ட த்ரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மனதில் ஜெஸ்ஸியாக இடம் பிடித்தார்.

#image_title
தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சிம்பு, விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி ஆகியோருடன் திரிஷா நடித்துள்ளார்.

#image_title
முக்கியமாக 96 திரைப்படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் திரிஷா நடித்தார். படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை த்ரிஷாவின் நடிப்பு அருமையாக இருந்தது.

#image_title
நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்த திரிஷாவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய ரீ என்டிரி ஆக அமைந்தது. அதன் பிறகு லியோ, தி ரோடு என அடுத்தடுத்த படங்களில் திரிஷா கமிட் ஆனார்.

#image_title
பல வருடங்கள் கழித்து விஜயுடன் திரிஷா நடித்த லியோ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

#image_title
திரை துறையில் திரிஷா 21 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கும் த்ரிஷாவின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title
இத்தனை வருடங்கள் ஆகியும் திரிஷா அப்படியே இருக்கிறார் என்றும், இளமை மாறாத அழகி எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

#image_title