கோலாகலமாக நடந்த பிரபு மகள் ஐஸ்வர்யா-இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்.. வாழ்த்து தெரிவித்த திரை நட்சத்திரங்கள்..!! - cinefeeds
Connect with us

GALLERY

கோலாகலமாக நடந்த பிரபு மகள் ஐஸ்வர்யா-இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்.. வாழ்த்து தெரிவித்த திரை நட்சத்திரங்கள்..!!

Published

on

பிரபல நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

#image_title

கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

#image_title

அதன் பிறகு சிம்பு நடிப்பில் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் வெற்றி அடையவில்லை.

#image_titleஅதன் பிறகு பிரபுதேவாவை வைத்து இயக்கிய பகீரா படமும் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

Advertisement

#image_title

இதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் 100 கோடி வசூலை குவித்து சாதனை படைத்தது.

#image_title

இந்நிலையில் ஐஸ்வர்யாவும் ஆதிக் ரவிச்சந்திரனும் நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் காதலாக மாறி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

#image_title

நேற்று சென்னையில் வைத்து ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது.

#image_title

இதில் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்று மணமக்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தியுள்ளனர்.

#image_title

இயக்குனர் மணிரத்னம் சுகாசினி நடிகர் விஷால், துல்கர் சல்மான், லெஜன்ட் சரவணன், சுந்தர் சி, குஷ்பூ, ஷாலினி, ராதிகா, சரத்குமார், வரலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#image_title

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. ரசிகர்கள் பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#image_title

Continue Reading
Advertisement