ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மனைவியா இது..? யாரும் பார்த்திராத அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ..!! - cinefeeds
Connect with us

GALLERY

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மனைவியா இது..? யாரும் பார்த்திராத அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ..!!

Published

on

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் ஹிந்தி படங்களில் வேலை பார்த்துள்ளார்.

#image_title

கடந்த 2007-ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிய தெலுங்கு திரைப்படமான யமடோங்கா திரைப்படத்தின் மூலம் சில்வா திரையுலகில் அறிமுகம் ஆனார்.

#image_title

திரையுலகிற்கு வருவதற்கு முன்பு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் செவிலியராக பயிற்சி பெற்ற சில்வா சொந்த ஊரான தூத்துக்குடியில் இருக்கும் மருத்துவமனைகளில் வார்டு பாயாக வேலை பார்த்தார்.

#image_title

இதனையடுத்து 2002-ஆம் ஆண்டு சில்வா திரைப்படத்துறையில் பணிபுரிய ஆரம்பித்தார். கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ரன், 2003-ஆம் ஆண்டு வெளியான திருமலை ஆகிய படங்களில் ஸ்டண்ட் நடன இயக்குனரான பீட்டர் ஹெய்னியிடம் சில்வா உதவியாளராக தனது வேலையை தொடங்கினார்.

#image_title

இவர் பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு யமடோங்கா திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு சில்வாவுக்கு கிடைத்தது.

#image_title

இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்த்துள்ளார். முன்னணி நடிகர்களான அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் பெரும்பான்மையான சண்டை காட்சிகளில் சில்வா பணிபுரிந்துள்ளார்.

#image_title

ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமில்லாமல் தலைவா, ஜில்லா, வீரம் ஆகிய படங்களில் உதவியாளராக வேலை பார்த்தார்.

#image_title

அதன் பிறகு கௌதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தில் சில்வா கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருந்தார்.

#image_title

இவரது முழு பெயர் செல்வன் என்றாலும், பலரும் இவரை சில்வா என்று தான் அழைக்கின்றனர். திரையுலகில் பல்வேறு கஷ்டங்கள் மற்றும் அவமானங்களை சந்தித்த பிறகு சில்வா தற்போது சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார்.

#image_title

சில்வாவுக்கு மங்கையர்கரசி என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகனும் இருக்கின்றனர். சில்வாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் லக்ஸ்களை அள்ளி குவிகின்றனர்.

#image_title

Continue Reading
Advertisement