தெலுங்கு ஸ்டாருக்காக அஜித்தை காக்க வைக்கும் திரிஷா.. விடாமுயற்சி படம் தள்ளி போக காரணம் இதுதானா..? வெளியான தகவல்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தெலுங்கு ஸ்டாருக்காக அஜித்தை காக்க வைக்கும் திரிஷா.. விடாமுயற்சி படம் தள்ளி போக காரணம் இதுதானா..? வெளியான தகவல்..!!

Published

on

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் விடாமுயற்சி பட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அர்பைஜனில் நடைபெற்றது. ஆனால் வானிலை மாற்றம் காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது படக்குழுவினர் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் கடைசியாக அஜித்தும் திரிஷாவும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர். ஆனால் திரிஷா தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ள விஸ்வம்பரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷா கமிட் ஆகியுள்ளார்.

இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. தற்போது அந்த படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் திரிஷாவால் விடாமுயற்சி படத்திற்கு கால்ஷீட் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விடாமுயற்சி படக் குழுவினர் திரிஷாவிடம் கால்ஷீட் அட்ஜஸ்ட் பண்ணி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement