6 வருஷமா பேசல…. தனுஷுடனான பிரச்சனை…. பேட்டியில் வெளிப்படையாக பேசிய ஜி.வி பிரகாஷ்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

6 வருஷமா பேசல…. தனுஷுடனான பிரச்சனை…. பேட்டியில் வெளிப்படையாக பேசிய ஜி.வி பிரகாஷ்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக அறியப்பட்ட ஜிவி பிரகாஷ் தற்போது நல்ல நடிகராகவும் இருந்து வருகின்றார். வெயில் என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார். வெயில் திரைப்படத்தில் இசையமைக்கும் போது அவருக்கு வயது 17. பின்னர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இவர் இசையமைத்திருந்த பாடலை கேட்டு பலரும் ஆச்சரியப்பட்டு போனனர்.

#image_title

கண்டிப்பாக இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது நிறைவேறாமல் போனது. தொடர்ந்து முயற்சி செய்து சூரரை போற்று திரைப்படத்திற்கு இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கிய ஜிவி பிரகாஷ் திரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

#image_title

இன்று அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் கள்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இவரும் நடிகர் தனுஷும் நல்ல நண்பர்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக இருவரும் பேசாமல் இருந்தனர். இது குறித்து youtube சேனல் ஒன்றுக்கு ஜிவி பிரகாஷ் பேட்டி கொடுத்துள்ளார். இரண்டு நண்பர்கள் இருக்கும்போது பிரச்சனை வருவது சகஜம் தான். அப்படி தான் எங்கள் இருவருக்கும் இடையில் சண்டை வந்தது. நாங்கள் ஆறு வருடம் பேசாமல் இருந்தோம். தற்போது எல்லாம் சரியாகி சேர்ந்து விட்டோம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in