CINEMA
சிம்பு, தனுஷ் உடன் ரொமான்ஸ் செய்ய ஆசை… உண்மையை போட்டுடைத்த பிரபல தொகுப்பாளினி..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தான் சிம்பு மற்றும் தனுஷ். சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்துள்ள தக் லைப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் தான் அடுத்த ரிலீசாக உள்ளது. இன்னொரு பக்கம் நடிகர் தனுஷ் இட்லி கடை பட வேலைகளில் செம பிசியாக இருக்கிறார். இதற்கிடையில் தமிழ் சினிமாவின் தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே முதலில் மக்களுக்கு ஞாபகம் வருவது டிடி தான். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அதில் படங்களில் நடிகர்களுக்கு தோழியாக, தங்கையாக நடிக்க விருப்பமில்லை.
ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க ஆசை உள்ளது என்று கூற யாருடன் ரொமான்ஸ் செய்ய ஆசை உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரோடு நடிக்க ஆசை என்றும், நடிப்பில் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.