CINEMA
3 வயதிலிருந்து நானும், சிம்புவும் அனுபவிக்கிறோம்… உண்மையை போட்டுடைத்த நடிகர் கமலஹாசன்..!!

உலகநாயகன் என அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமலஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் வெளிவந்தது. ஆனால் இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. கமலஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் நடித்து வரும் தக் லைப் படம் வரும் ஜூன் ஐந்தாம் தேதி வெளிவர உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள் படக்குழுவினர். அந்த வகையில் நடிகர் கமலஹாசன், த்ரிஷா, நடிகர் சிம்பு ஆகியோர் அளித்த பேட்டி ஒன்றில் கமல் சொன்ன விஷயம் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில் நான் என்னுடைய அப்பா, அம்மா, அண்ணாவை பார்த்து தான் நடக்க மற்றும் சினிமா என்றால் என்ன என்பது குறித்து கற்றுக்கொண்டேன். எங்களின் நட்சத்திர அந்தஸ்தில் தூக்கி வைக்க எதையும் செய்யாமல் விடாமல் தடுத்து விடுவார்கள். சாதாரண வாழ்க்கையை இழந்தவர்கள் நாங்கள் .அதனால் தான் சிலர் விசித்திரமாக நடந்து கொள்கிறார்கள். இதை மூன்று வயதிலிருந்து நானும் சிம்புவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.