விவாகரத்திற்கு பிறகு தனுஷ் போட்டோ எமோஷனல் ட்விட்… ஐஸ்வர்யாவுக்கு மறைமுக தூதா?.. செம குஷியில் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

விவாகரத்திற்கு பிறகு தனுஷ் போட்டோ எமோஷனல் ட்விட்… ஐஸ்வர்யாவுக்கு மறைமுக தூதா?.. செம குஷியில் ரசிகர்கள்..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் , ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ரஜினி 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கினார். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இது வெற்றி படமாக அமைந்ததற்கு அனிருத்தின் இசை மற்றும் பின்னணி பாடல்கள் முக்கிய காரணம். இதனை அடுத்து அந்த படத்திற்கு அவர் போட்ட பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தன. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

அப்போது தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்த நிலையில் தமிழில் இந்த திரைப்படம் எப்போது ரீ-ரிலிஸ் செய்யப்படும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கடந்த வாரம் 3 திரைப்படம் தமிழகத்தில் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. புது படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்குமோ அந்த அளவிற்கு இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்ததால் பட குழுவினர் திக்கு முக்காடி போயினர். ரசிகர்களின் அன்பால் திகைத்துப் போன தனுஷ் அவர்களுக்கு நன்றி என twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதில், 3 படத்தின் ரிலீஸுக்கு கிடைக்கும் வரவேற்பு மிகவும் எமோஷனலாக உள்ளது. இந்த வரவேற்புக்கு கோடான கோடி நன்றி என நெகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகும் போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கணவன் மனைவியாக இருந்த நிலையில் தற்போது பிரிந்து விட்டாலும் தன்னுடைய முன்னாள் மனைவியின் படத்திற்கு ரசிகர்கள் தரும் அன்பை பார்த்து எமோஷனலாக தனுஷ் போட்டுள்ள இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் தூது விடுகிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in