என்னது படையப்பா படத்தில் ஜெயலலிதாவா?.. அதுவும் இந்த கதாபாத்திரமா?… பல வருடம் கழித்து மனம் திறந்த KS ரவிக்குமார்…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது படையப்பா படத்தில் ஜெயலலிதாவா?.. அதுவும் இந்த கதாபாத்திரமா?… பல வருடம் கழித்து மனம் திறந்த KS ரவிக்குமார்…!!

Published

on

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி மற்றும் மீனா நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முத்து. இந்த திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் ஜப்பான் நாட்டிலும் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற சாதனையை 20 ஆண்டுகளுக்கு மேலாக தக்க வைத்திருந்தது. கடந்த வருடம் ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானில் இந்த சாதனையை முறியடித்தது. இந்த நிலையில் முத்து திரைப்படம் புதுப்புலியுடன் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தன்னுடைய படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் பற்றி மனம் திறந்தார். அதிலும் குறிப்பாக அவர் இயக்கிய படையப்பா திரைப்படத்தில் இடம்பெறும் நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் எழுதியதாகவும், படையப்பா நீலாம்பரி கேரக்டர் அப்படியே ஜெயலலிதா மேடம் என்று எல்லோரும் சொல்லுவாங்க. நான் எழுதும் போதும் மனதில் அவரை வைத்து கொண்டு தான் எழுதினேன். ஏனென்றால் அப்படி ஒரு கம்பீரமான பெண்மணிக்கு எப்படி எல்லாம் உடல் மொழி இருக்க வேண்டும் என்று பீல் பண்ணி தான் அதை எழுதினேன்.

Advertisement

ஆனா அந்த படம் எல்லா நாட்டுலயும் ஓடி இருக்கு, அங்கிருப்பவர்களுக்கு ஜெயலலிதாவை பற்றி தெரியாது. அதனால்தான் படம் வெற்றி அடைகிறது என்பதில்லை. இதெல்லாம் எக்ஸ்ட்ரா போனஸ் மாதிரி. அதனைப் போலவே படையப்பா படத்தில் இடம்பெறும் ஓஹோ ஓஹோ கிக்கு ஏறுதே பாடலும் தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே என்ற வரிகளும் எம்ஜிஆர் தாக்கும் விதமாக வைக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதில் அளித்த ரவிக்குமார், அவரை தாக்கி பாடவில்லை, எம்ஜிஆர் ஆகவே இருந்தாலும் கடைசியில் மண்ணுக்குள்ள தான் அதுதான் இயற்கை என்பதை உணர்த்தவே அந்த வரிகள் வைக்கப்பட்டது என்று கே எஸ் ரவிக்குமார் மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in