பல வருடங்கள் கழித்து தயாரிப்பில் இறங்கும் ஏ.வி.எம் நிறுவனம்.. சூர்யா படமா..? ஆனா தமிழ் இல்லையா..? என்னப்பா சொல்றீங்க..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பல வருடங்கள் கழித்து தயாரிப்பில் இறங்கும் ஏ.வி.எம் நிறுவனம்.. சூர்யா படமா..? ஆனா தமிழ் இல்லையா..? என்னப்பா சொல்றீங்க..!!

Published

on

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் ஏராளமான படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் ஏ.வி.எம் நிறுவனம் திடீரென தயாரிப்பு பணிகளை நிறுத்தப் போவதாக அறிவித்தது. இதனையடுத்து சினிமாவில் படம் எடுக்க ஆசைப்பட்டு வரும் சின்ன இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்கும் முயற்சியில் ஏ.வி.எம் நிறுவனம் ஈடுபட போவதாக சில செய்திகள் வெளியானது.

#image_title

ஆனால் தற்போது ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பு குறித்து புது அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது ஏ.வி.எம் நிறுவனம் கடைசியாக தயாரித்த படம் அயன். அந்த படத்தை கே.வி ஆனந்த் இயக்கினார். பக்கா கமர்ஷியல் படமான அயனில் சூர்யா நடித்திருந்தார். அயன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

#image_title

அந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். தெலுங்கிலும் அயன் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்நிலையில் ஏ.வி.எம் நிறுவனத்தினர் அயன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபட உள்ளார்களாம். முற்றிலும் தெலுங்கு நடிகர்களை வைத்து தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதையில் சில மாற்றங்கள் செய்து படம் உருவாகப் போகிறதாம்.

#image_title

இந்த படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். சில ஆண்டுகள் கழித்து ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்கும் படம் தமிழில் இல்லாமல் தெலுங்கில் ரீ- என்ட்ரி கொடுப்பதால் படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement