மீண்டும் இணைகிறதா? வேட்டையாடு விளையாடு கூட்டணி – சந்தோஷத்தில் ரசிகர்கள் - Cinefeeds
Connect with us

CINEMA

மீண்டும் இணைகிறதா? வேட்டையாடு விளையாடு கூட்டணி – சந்தோஷத்தில் ரசிகர்கள்

Published

on

தனது சிறுவயது முதல் ஆரமித்து தற்போது வரை ரசிகர் கூட்டம் கொண்டவர். உலக நாயகன் கமல் ஹசான் நடிப்பு மட்டும் இல்லாமல் அரசியலிலும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் வேட்டையாடு விளையாடு.இப்படம் காதல் மற்றும் ஆக்ஷன் படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை அடைந்து கொண்டாடப்பட்டது.

மேலும் இப்படம் வெளிவந்த சமையத்தில் இயக்குனர் கெளதம் மேனனுக்கு மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்ப்பு கிடைத்தது. இதன்பின் இந்த கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என்று பல தரப்பு ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.இந்நிலையில் தற்போது இந்த வேட்டையாடு விளையாடு கூட்டணி மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆம் கமலஹாசன் மற்றும் கெளதம் மேனன் மீண்டும் இணையவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு வேட்டையாடு விளையாடு 2 என்று தலைப்பு வைக்க போவதாகவும் சில தகவல்கள் தெரிவந்துள்ளது.

ஆனால் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.