இதுக்கு பேருதா அப்டேட்டா…! “சிம்பதி குயின் சமந்தாவையே ஓரம் கட்டிய ஏகே”…. அஜித்தை கலாய்த்த பத்திரிக்கையாளர்..!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இதுக்கு பேருதா அப்டேட்டா…! “சிம்பதி குயின் சமந்தாவையே ஓரம் கட்டிய ஏகே”…. அஜித்தை கலாய்த்த பத்திரிக்கையாளர்..!!!

Published

on

அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது லைகா நிறுவனம். இதைப் பற்றி மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் சினிமாவில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஸ்டண்டு காட்சிகளில் பல நடிகர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து நடித்து தான் வருகிறார்கள்.

#image_title

ஹாலிவுட் நடிகர் டாம் குருஸ் பல அடி உயரம் மலையில் இருந்து பைக்கில் விழும் காட்சிகள் எல்லாம் வெளியாகி இருக்கின்றது. பெரும்பாலான நடிகர்கள் தங்களது ரசிகர்களை கஷ்டப்படுத்தும் வகையில் எந்த ஒரு வீடியோவும் வெளியிடுவது கிடையாது . ஆனால் நடிகர் அஜித் அதற்கு மாறாக பைக்கில் இருந்து கீழே விழுவது போன்ற காட்சிகளிலும் கார் கவிழ்ந்து ஸ்டண்ட் செய்வது போன்ற காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்து அந்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

#image_title

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மையோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதனை வைத்து பிரமோஷன் செய்து சிம்பதி கிரியேட் செய்து கொண்டிருந்தார். ஆனால் தயாரிப்பாளர் தான் தன்னை வற்புறுத்தி அப்படி செய்ய சொல்லியதாக சமீபத்திய பேட்டியில் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

#image_title

அதேபோலதான் தற்போது அஜித்தும் பைக்கில் இருந்து கீழே விழும் காட்சிகள் மற்றும் கார் ஸ்டண்ட் காட்சிகளை வெளியிட்டு சிம்பதி கிரியேட் செய்து கொண்டிருக்கின்றார். விடாமுயற்சி படத்திலிருந்து ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்டால் அஜித் பிரியாணி கிண்டுவது, கீழே விழுந்து வாருவது என வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்று கலாய்த்து இருக்கிறார் அந்தணன்.

Advertisement