LATEST NEWS
வலிமை ஹீரோயின் இவங்களா? உளறிய அபிராமி……விவரம் இதோ
தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலக அரங்கில் தனக்கென மிகப்பெரும் இடம் வைத்து இருப்பவர் முன்னணி நடிகரான தல அஜித். இவர் கிட்டத்தட்ட 60 படங்கள் வரை நடித்து உள்ளார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த பைக் ரேசர் அவர், இது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல், ஐஐடி மாணவர்களுக்கு வழிகாட்டி என பல உருவங்கள் கொண்டவர். தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை இப்படம் பெண்கள் பாதுகாப்பு குறித்து நன்றாக பேசியது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனர் எச் வினோத் இயக்கிய இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் அபிராமி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார், இந்த நிலையில் வலிமை பட ஹீரோயின் யார் என்பது பெரும் மர்மமாக இருந்தது. தற்போது இதற்கு விடை கிடைத்து உள்ளது. ஆம் லைவ் வீடியோ ஒன்றில் வலிமை ஹீரோயின் குறித்து அபிராமி உளறி கொட்டியுள்ளார். இந்த வீடியோ தல ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பரவியது.
ஆம் பாலிவுட் நடிகையான ஹீமா குரோஷி தான் இப்படத்தில் நடிக்கிறார். இதனை அபிராமி தன் வாயால் சொல்வதை நீங்களே கேளுங்க.
BIG BREAKING..!📢@Abhiramivenk Confirms That Bollywood Actress @humasqureshi
Is Officially on Board For AJITH Sir’s
Upcoming Biggie #Valimai..!🎉 pic.twitter.com/YmKAEbYoar— Karnataka Ajith Fans Welfare Association (@KarnatakAjithFC) March 11, 2020