LATEST NEWS
சீரியல் நடிகர் வெங்கட்க்கு நடந்த கொடுமை!!! ஒரு ஆணுக்கே இப்படின்னா?என்று பேட்டியில் கூறியுள்ளார்…சன் ம்யூசிக்கில் நடந்தது என்ன???
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஜீவா வேடத்தில் நடித்து வருபவர் வெங்கட்….இவர் முதல் முதலில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக தான் சின்னத்திரைக்கு வந்துள்ளார். ஆனால் அந்த சீரியல் டிராப்பானதால் சன் ம்யூசிக் சேனலில் பணியில் சேர்ந்துள்ளார்.
அப்போது ஒரு ஷோவிற்கு ரூ 250 தான் கொடுப்பார்களாம். அதுவும் அங்கிருப்பவர்களை அட்ஜெஸ்ட் செய்தாக வேண்டும் …என அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதாவது நாளைக்கு ஷோ இருக்கு என்றால் அவருக்கு மெசேஜ் வரும் ஆனால் ஒரு நாள் வராததால் போன் செய்து கேட்டுள்ளனர். அதற்கு மேல் அதிகாரி ஒருவர் சிகிரெட் வாங்கிட்டு வாங்க என கூறியுள்ளார்.
ஜீவாவும் வாங்கி கொண்டு போய் கொடுத்தார்… அடுத்த நாள் மெசேஜ் வந்துள்ளது. மீண்டும் மெசேஜ் வராததால் போன் செய்து கேட்க ஜீன்ஸ் பேண்ட் வாங்கிட்டு வா என்று சொல்லி இருக்கார்.
நான் வாங்கிட்டு போகல, அதனால எனக்கு மெசேஜ் -ம் வரல, போன் பண்ணி கேட்டதற்கு எப்போ ஜீன்ஸ் பேண்ட் வாங்கிட்டு வாறீங்களோ அப்போ தான் ஷோ என சொல்லி இருக்கிறார்…
ஜீன்ஸ் பேண்ட் வாங்கிட்டு போய் கொடுத்ததும் தொடர்ச்சியாக ஷோ கிடைத்தது என கூறியுள்ளார். மேலும் அந்த நபரின் பெயரை சொல்ல விரும்பவில்லை எனவும் வெங்கட் கூறியுள்ளார்.
தனக்கு ஒரு வயது இருக்கும் போது அப்பாவை இழந்து விட்டதாகவும், அம்மா ஆரம்பத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் பாத்ரூம் கழுவி பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வைக்கும் வேலைய செய்ததாக கூறியுள்ளார்.
இதனால் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று அனைத்தையும் பொறுத்து கொண்டு சன் ம்யூசிக்கில் வேலை பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.
ஒரு ஆணுக்கே இப்படி என்றால் பெண்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக இருப்பதாக பேட்டியில் வெங்கட் கூறியுள்ளார்…இந்த செய்தி பெறும் சோகத்தை ஏற்படுத்தியது…
