தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்,ஒளிப்பதிவாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராஜீவ் மேனன். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமியை வைத்த மின்சார கனவு என்ற திரைப்படத்தை முதன்முறையாக இயக்கினார்.

அந்த திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு எந்த திரைப்படங்களையும் இயக்காமல் இருந்த இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வம் தாள மயம் திரைப்படத்தை இயக்கினார்.

இதனிடையே இவர் கல்யாணி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சரஸ்வதி மற்றும் லட்சுமி என்ற இரண்டு மகள்கள் இவருக்கு உள்ளனர். தற்போது இவரின் மகள் சரஸ்வதி சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார்.

வசந்த் ரவி நடிக்கும் சைக்கோ திரில்லர் கதையில்தான் சாரா மேனன் நாயகியாக நடிக்க உள்ளார். தற்போது ராஜீவ் மேனன் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.