TRENDING
கணவனின் தகாத உறவு… “பின் நடந்த கொடூரம் தாய் தந்தையை”… இழந்து பரிதவிக்கும்.. சிறுபிள்ளைகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் 40வயது, இவர் கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நதியா 35வயது இவர்களுக்கு மதன் வயது 9 வைஷ்ணவி வயது 6 என 2 குழந்தைகள் உள்ளனர். சக்திவேலுக்கு தகாத உறவு இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று நதியா தன்னுடைய வீட்டில் இருக்கும்பொழுது வழக்கம் போல் நதியாவிற்கும் சக்திவேலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சக்திவேல் கத்தியால் நதியாவின் கழுத்தை அறுத்து மார்பு பகுதியில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே நதியா உயிரிழந்தார். போலீசார் கைது செய்து விடுவர் என்ற பயத்தில் உடனே சக்திவேல் கழுத்தை அறுத்து கொண்டார்.
சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சக்திவேல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்த தகவலின்பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.