TRENDING
ஒரு கிலோ மட்டன் ரூபாய் 350…. “அலை மோதிய மக்கள்”… ‘பின் வெளியான பகீர் தகவல்.. ‘சேலம் பரபரப்பு..?
தற்போது தமிழ் நாடு முழுவதும் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த இரு தினங்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள பால்பண்ணை, கொல்லப்பட்டி, இரும்பாலை போன்ற பகுதியில் ஆட்டுக்கறி பாதி விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது , இதனை அறிந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள். சோதனை நடத்திய போது நோய்வாய்ப்பட்ட ஆட்டுக்கறியை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
மேலும் ஆய்வில் நோய்வாய்ப்பட்ட மற்றும் இறந்த ஆடுகளின் இறைச்சி கிலோ 500 ரூபாய்க்கு வாங்கி.குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அதனை பாதி விலைக்கு வீரப்பனை செய்தனர்.
பின்னர் ஆட்டு இறைச்சி கடையில் இருந்து இரு ஆடுகளை பிடித்து அதிகாரிகள் கால்நடை பராமரிப்பு அலுவலத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆடுகளை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த ஆடுகளுக்கு நோய் தோற்று பரவி உள்ளது என தெரிவித்தனர்.
பின்னர் ஆட்டு இறைச்சி கடைக்காரர்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும் கடையில் இருந்த அறை டன் ஆட்டு இறைச்சியை மண்ணில் புதைத்தனர். இந்த தகவல் அறிந்த பொது மக்கள் நோய்வாய்ப்பட்ட இறைச்சியா பாதி விலைக்கு வாங்கி சென்றோம் என்று புலம்பி வருகிறார்கள்.
