டீ சாப்பிடும் போது இந்த வகை உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க… அப்புறம் உங்களுக்கு தான் பிரச்னை? எச்சரிக்கும் உணவியல் வல்லுனர்கள்! – cinefeeds
Connect with us

LifeStyle

டீ சாப்பிடும் போது இந்த வகை உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க… அப்புறம் உங்களுக்கு தான் பிரச்னை? எச்சரிக்கும் உணவியல் வல்லுனர்கள்!

Published

on

Tea

நம்மில் பலருக்கும் டீ சாப்பிடும் பழக்கம் உள்ளது. அப்படி டீ சாப்பிடும் போது சிலர் இணைப்பாக சில வகை உணவு வகைகளை எடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக பலரும் பலகாரம் மற்றும் ஸ்நேக்ஸ் சாப்பிடுவார்கள். அந்த வகையில் டீ சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய சில உணவுகள் குறித்து இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.

மஞ்சள் கலந்த உணவுகள் – டீ சாப்பிடும் போது மஞ்சள் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. இதனால் வாயுத்தொல்லை வயிற்று அசௌகரியம் ஏற்படலாம். எனவே டீ சாப்பிடும் போது மஞ்சள் கலந்த உணவுகளுக்கும் டீக்கும் சிறிது இடைவெளி இருப்பது அவசியம்.

Advertisement

காரமான பொருட்கள் – அதேபோல் டீயுடன் காரமான உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது. பூண்டு மிளகாய் மற்றும் மசாலா பொருட்களுடன் உள்ள உணவுகளை சாப்பிட்டால் இரைப்பை அமில உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் அஜீரணம் ஏற்படலாம். சாக்லேட்டில் உள்ள காஃபின் கொழுப்பு சர்க்கரை போன்றவை சேர்த்து சாப்பிடும்போது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

குளிர்ந்த நீர் – அதே போல் டீ குடித்தவுடன் குளிர்ந்த நீர் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதனால் உடல் வெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் செரிமான அமைப்பில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். வயிற்றுப் பிடிப்பு வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகள் வரலாம்.

Advertisement

எலுமிச்சை – எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. அதனால் எலுமிச்சை கலந்த உணவுகளை டீயுடன் சாப்பிட்டால் செரிமான அமைப்பில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அமிலத்தன்மை அல்லது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். அதனால் டீக்கும் எலுமிச்சை சார்ந்த உணவுகளுக்கும் சிறிது இடைவெளி இருப்பது மிகவும் அவசியம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in