LifeStyle
உங்களுக்கு சுகர் இருக்கா? காலையில் நீங்க சாப்பிட வேண்டியது என்ன தெரியுமா? இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுக்க இனிமே இதை சாப்பிடுங்க!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட சுகர் பேஷண்டுகள் உணவு விஷயத்தில் எப்போதும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். காலை நேரத்தில் சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த காலை உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கான சில சிறந்த காலை நேர உணவுகள் குறித்து இப்போது தெரிந்துக்கொள்ளலாம். ஓட்ஸ் கஞ்சி – நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓட்ஸ் செரிமானத்தை மெதுவாக்கி இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
முட்டை – புரதச்சத்து நிறைந்த முட்டை வேக வைத்து அல்லது ஆம்லெட் ஆக சாப்பிடலாம். நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கிறது. காய்கறி இட்லி அல்லது தோசை – அரிசிக்கு மாற்றாக ராகி அதாவது கேழ்வரகு, தினை கம்பு போன்ற சிறுதானியங்கள் மற்றும் உளுந்து சேர்த்து செய்யப்படும் இட்லி, தோசை சுகர் பேஷண்டுகளுக்கு மிகவும் நல்லது.
முளைகட்டிய பயறு சாலட் – பாசிப்பயறு கொண்டக்கடலை போன்றவற்றை அவித்து வெங்காயம் தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடுவது நல்ல புத்துணர்ச்சியையும் சத்துக்களையும் தருகிறது. சியா விதை அல்லது கிரேக்க தயிர் – இனிப்பு சேர்க்காத தயிர் மற்றும் சியா விதைகளுடன் ஆப்பிள் கொய்யா போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களை சேர்த்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள ஸ்மூர்த்தி ஏற்றதாக இருக்கும். அதற்கேற்ப இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத மற்றும் சரியான ஊட்டச்சத்துள்ள பொருட்களைக் கொண்டு ஸ்மூத்தி தயாரிக்கப்பட வேண்டும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள ஸ்மூத்தி தயாரிப்பதற்கு முக்கிய பொருளாக கொழுப்பு இல்லாத பால் கொழுப்பு இல்லாத தயிர் பாதாம் பால் இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்ததாக இந்த ஸ்மூத்தியுடன் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகள் அதிகம் நிறைந்த மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான பழங்களை சேர்க்கலாம். அந்த ஸ்மூத்தியில் காய்கறிகளான ஸ்ட்ராபெரி ஆப்பிள் ப்ளூபெர்ரி சேர்க்க வேண்டும்.
அந்த ஸ்மூத்தியில் அவகேடோ வெள்ளரிக்காய் சேர்க்க வேண்டும். பசலைக்கீரை கேல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையும் சேர்க்கலாம். சுகரை கட்டுப்படுத்தும் அந்த ஸ்மூத்தியின் மேல் நார்ச்சத்து அதிகம் நிறைந்த நட்ஸ் ஆளி விதை அல்லது சியா விதைகளை டாப்பிங்காக பயன்படுத்தலாம். இதுபோன்ற ஸ்மூத்தியை சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் இதன் மூலம் சர்க்கரை அளவை சீராக கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
