LifeStyle
இன்று இந்த ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகும்… இந்த ராசிக்காரங்க விட்டு கொடுத்து செல்வது ரொம்ப நல்லது – இன்றைய ராசி பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
ஜூன் 26ம் தேதியான இன்று பொதுவான ராசிபலன்களை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தின்படி இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
மேஷம்: இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்: நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும்.
மிதுனம்: திறமைகள் வெளிப்படும் நாள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் காணப்படும்.
கடகம்: சுபச் செய்திகள் வந்து சேரும் இனிய நாள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்: புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்குப் பெற்றோரின் ஆதரவு கிட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கன்னி: திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கலாம். விட்டுகொடுத்துச் செல்வது நல்லது.
துலாம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. முக்கிய முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்: நினைத்த காரியங்கள் சுலபமாக முடியும் நாள். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். மன அமைதி கூடும்.
தனுசு: கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்கள் சாதகமான பலனைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மகரம்: புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்களின் பேச்சுக்குச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதார நிலை உயரும்.
கும்பம்: வாகனப் பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மீனம்: தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள். சுப காரிய முயற்சிகள் கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
