TRENDING
நம்பி வந்த 15வயது சிறுமி… நீலாங்கரை பங்களா.. 3 வார காலமாக மாறி , மாறி நண்பர்கள் செய்த அட்டூழியம்… சென்னையை உலுக்கிய கொடூரம்!!
வீட்டு வேலை செய்யும் பெண்ணை தண்ணி கேன் போடவரும் இளைஞன் காதலிப்பதாக ஆசை வார்த்தையை கூறி நம்பி வந்த சிறுமியை நண்பர்களோடு சேர்ந்து சிதைத்த கொடூரம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ரீனா சென்னை அடையாறில் உள்ள தனது உறவினர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டிற்கு தண்ணீர் கேன் போடுவதற்கு வந்து செல்பவர் தான் சதீஷ் குமார் என்ற இளைஞர். இவர் அடிக்கடி தண்ணீர் கேன் போடும் போது சிறுமிக்கும் சதீஷ் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் சதீஷ்குமார், சிறுமியை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை காட்டி உள்ளார். இதனை நம்பிய அந்த சிறுமி ரீனா, வீட்டை விட்டு சதிஷ்குமாருடன் ஓடி வந்துள்ளார். அந்த சிறுமி ரீனாவை அழைத்து கொண்டு சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து சதீஷ் குமார், கற்பழித்துள்ளார்.
மேலும், தனது நண்பர்களான வினோத், ராஜா ஆகியோரை வரவழித்த சதீஷ் குமார் அந்த சிறுமி ரீனாவை கூட்டாக கற்பழித்துள்ளனர். இதே போல தொடர்ச்சியாக. சுமார் 2 வார காலம் அந்த சிறுமியை அந்த மூன்று பேரும் வெறி தீரும் வரை மாறி, மாறி பாலியல் கற்பழித்துள்ளனர். பின்னர் சிறுமி ரீனாவின் உறவினர் சிறுமி காணாமல் போய்விட்டதாக அடையாறு அனைத்து மகளிர்போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படியில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி ரீனாவை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவரின் வாக்கு மூலமாக சிறுமி நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு சிறுமி ரீனாவை பத்திரமாக மீட்டனர்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் சதீஷ்குமார், அவரது நண்பர்கள் வினோத், ராஜா ஆகிய 3 போரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த சிறுமி விழுப்புரத்தை சேர்ந்தவர் அம்மா தனித்து விட்டதால் அந்த சிறுமி அடையாறில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.