LATEST NEWS
2 மணி நேரம் போராட்டம்…. எப்படியாவது காப்பாத்திடனும்னு நினைச்சோம்…. “டேனியல் பாலாஜியின்” கடைசி நிமிடங்கள்…!!!

டேனியல் பாலாஜிக்கு கடைசியாக சிகிச்சை அளித்த மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் அறிமுகமாகி ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த டானியல் பாலாஜி பின்னர் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த மார்ச் 29ஆம் தேதி மாரடைப்பால் காலமானார் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

#image_title
இவருக்கு வயது 48. இவரது அண்ணன் முரளியும் 46 வயதில் மாரடைப்பு வந்து தான் உயிரிழந்தார். இந்நிலையில் டேனியல் பாலாஜிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அருண் சுந்தரம் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் டேனியல் பாலாஜி அவர்களை காப்பாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் இரண்டு மணி நேரம் போராடியும் முடியவில்லை. கார்டியாக் அரெஸ்ட் ஆனவர்களை காப்பாற்றுவது சற்று கடினம்.

#image_title
வலி வந்தவுடனே மருத்துவமனைக்கு வந்து விட வேண்டும். வாகனத்தை ஓட்டக்கூடாது. முதலில் சிம்டம்ஸ் வந்தால் அதை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. உடனே மருத்துவமனைக்கு வந்து விட வேண்டும். டேனியல்சாருக்கு மதிய வேளையில் இருக்கும் போதே வலி வந்திருக்கின்றது. அந்த வலி தீவிரமான பிறகு தான் நண்பருக்கு போன் செய்து கூறியிருக்கிறார். அதன் பிறகு அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். அப்படியும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்று வேதனையுடன் பேசி இருந்தார்.