LATEST NEWS
கூப்பிட்டது 3000 பேர்…! வந்தததோ 9000…! 2 முறை உடைஞ்ச ஸ்டேஜ்… பாண்டியம்மா reception-க்கு இம்புட்டு செலவா?…!!
ரோபோ சங்கர் மகள் இந்திரஜா ரோபோ சங்கருக்கு மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமலஹாசன் முதல் சிவகார்த்திகேயன் வரை என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றார்கள்.
அரசியல் பிரச்சாரத்தின் பிசியாக இருந்த கமலஹாசனும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் விஜய் சேதுபதி, சூரி, அதித்தி சங்கர், நளினி, செந்தில், இயக்குனர்கள், காமெடி நடிகர்கள் என பலரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு கூட்டம் அதிகமாக வந்ததால் ஸ்டேஜ் இரண்டு முறை உடைந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதாவது திருமணத்திற்கு வெறும் 3000 பெயர்தான் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொத்தம் 9 ஆயிரம் பேர் வந்திருந்ததால் ஸ்டேஜ் அருகே கூட்டம் அதிகரித்து விட்டது. இதனால் இரண்டு முறை ஸ்டேஜ் உடைந்து விட்டதாக இந்திரஜா ரோபோ சங்கர் தனது youtube வீடியோவில் கூறியிருக்கின்றார்.
மேலும் அந்த வீடியோவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் அளித்த கிப்ட் அனைத்தையும் அவர் ஒரு ரூம் நிறைய அடுக்கி வைத்திருந்தார். மேலும் ரோபோ சங்கர் பணத்தை சம்பாதித்ததை விட மனிதர்களை அதிகளவு சம்பாதித்து இருக்கின்றார் என்று மிக மகிழ்ச்சியாக அவர் மகள் இந்திரஜா அந்த வீடியோவில் பேசியிருந்தார்.