LATEST NEWS
ஒர்க் அவுட்டில் அசத்தும் கணவன் & மனைவி…. சூர்யாவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே…. வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது மும்பைக்கு குடி பெயர்ந்திருக்கின்றார். இவரது மனைவி ஜோதிகா. இவரும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து வருகின்றார்.

#image_title
தமிழில் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்தார். தற்போது பாலிவுட்டில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் வகையில் சைத்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

#image_title
மும்பைக்கு சென்றதிலிருந்து ஜோதிகா ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வந்திருந்தார். இந்நிலையில் தற்போது தனது கணவருடன் சேர்ந்து ஒர்க்அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஜோடியாக சேர்ந்து அசத்துராங்களே என்று கூறி வருகிறார்கள்.
https://twitter.com/CinemaWithAB/status/1775163993239572830