ஷூட்டிங்கில் சினேகாவை பிராங்க் செய்த விஜய்…. இவரு இப்படி எல்லாம் கூட செய்வாரா?… பிரபலம் சொன்ன தகவல்…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷூட்டிங்கில் சினேகாவை பிராங்க் செய்த விஜய்…. இவரு இப்படி எல்லாம் கூட செய்வாரா?… பிரபலம் சொன்ன தகவல்…!!!

Published

on

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் விஜய் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் மாதம் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஆகஸ்ட்  மாதம் இப்படம் வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.

#image_title

மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த பிராங்க் குறித்து ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பேசியிருக்கிறார். அதாவது விஜய் நடிப்பில் வெளியான வசீகரா, அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்தான் பாலசுப்ரமணியன்.

#image_title

இவர் வசீகரா படத்தின் போது விஜய் செய்த பிராங்க் குறித்து பேசி இருக்கிறார். விஜய் வசீகரா செட்டில் செம ஜாலியாக இருப்பார். ஷூட்டிங் முடிந்து இரவு நேரம் அனைவரும் ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்தோம். ஒரு 12 மணியின் போது ரூமின் கதவுகள் தட்டப்பட்டது. கதவைத் திறந்து பார்த்தால் யாரும் இல்லை. மறுபடியும் ரூமின் கதவை யாரோ தட்டுவது போல் சத்தம் கேட்க திறந்து பார்த்தேன். தூரத்தில் இரண்டு உருவம் கருப்பு கலர் பெட்ஷீட்டை அணிந்து கொண்டு ஓடியது. அதை பார்த்து எனக்கு பயமே வந்துவிட்டது.

#image_title

அந்த உருவம் வேறு யாரும் இல்லை விஜய்யும் நடன இயக்குனர் தான். இதே போல சினேகா ரூமையும் தட்டி அவரையும் பயமுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் மறுநாள் மற்றவர்கள் எல்லாம் விஜய் தான் இதை செய்தார் என தெரிந்து விட்டது. சினேகாவிற்கு மட்டும் இந்த விஷயம் தெரியாததால் ஏதோ பேய் இருப்பதாக கூறி அவர் பயந்து கொண்டு இருந்தார். பின்னர் விஜய் தான் அந்த பிராங்க் செய்தார் என்று சினேகாவிடம் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் கூறியிருக்கிறார்.

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in