LATEST NEWS
குழந்தையை சொல்லி அமிர்தாவை அழ வைத்த பாட்டி… வாய வெச்சுட்டு சும்மா இருக்காத கோபி…. இன்றைய எபிசோட்…!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட் பாக்கியா, எழில், அமிர்தா என அனைவரும் அமர்ந்து ரெஸ்டாரண்டில் வரவு செலவு கணக்குகளை பார்த்து வருகிறார்கள். அப்போது வருமானம் இல்லாமல் ஹோட்டல் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
அங்கு வந்த கோபி தன்னுடைய முதல் பிசினஸில் தனக்கு வந்த லாபத்தை சொல்லி பெருமை பேசிக்கொண்டிருக்கின்றார். இதனால் எழில் கடுப்பாகுகின்றார். இதைத்தொடர்ந்து செழியன் போன் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது அங்கு வந்த ஜெனி யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என துருவித் துருவி அவரை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
பின்னர் ஹாலில் ஈஸ்வரியில் ஜெனி குழந்தையை வைத்து கொஞ்சி கொண்டு இருக்கின்றார். அங்கு வந்த பாக்யாவிடம் அமிர்தாவை தினமும் ஏதற்கு ரெஸ்டாரன்ட் கூட்டிட்டு போகிறாய். வீட்டில் இருக்கும் வேலையை யார் பார்ப்பது என்று கூற நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அமிர்தா கூற அங்கு போயிட்டு இருந்தா உனக்கும் எழிலுக்கும் எப்படி பாசம் வரும்.
எழிலும், நீயும் எப்போது குழந்தைய பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று கேள்வி கேட்க இதைக் கேட்டு ஜெனியும் பாக்கியம் அதிர்ச்சியாகிறார்கள். மேலும் கணேஷ் மீண்டும் வருவதற்குள் உங்க ரெண்டு பேருக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று கூற அமிர்தா கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடுகின்றது. உடனே ஜெனி நீங்க பேசுவது ரொம்ப தப்பு என்று கூறுகிறார், இன்றைய எபிசோட் இப்படி தான் நடந்து முடிகிறது.