LATEST NEWS
KPY பாலாவின் காதலுக்கு வந்த புது சிக்கல்…. இதெல்லாம் ஒரு குத்தம்மா?… தனக்குத்தானே வைத்துக் கொண்ட ஆப்பு…!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் பாலா. சின்ன திரையில் கிடைத்த பேரும் புகழையும் வைத்து தற்போது வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் சமீப காலமாக தன்னால் இயன்றதை மக்களுக்கு செய்து வருகின்றார்.
சில மாதத்திற்கு முன்பு மலை கிராமம் ஒன்றுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். அதைத் தொடர்ந்து பலருக்கு ஆட்டோ, தையல் மெஷின், இருசக்கர வாகனம், திருமணம் உதவி என அனைத்தையும் செய்து வருகிறார். இவர் சமீபத்தில் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென்று அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
பாலா காதலித்த வந்த பெண்ணின் அவருடைய வீட்டாரும் தற்போது பாலாவுக்கு திருமணம் செய்து வைக்க யோசித்து வருகிறார்களாம். ஏனென்றால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொண்டு முன்னேறி விட வேண்டும். பட வாய்ப்பு இல்லை என்றால் கஷ்டப்பட வேண்டும். ஆனால் இவர் தற்போது இருக்கும் பணத்தை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி விடுகிறார். இப்படிப்பட்டவருக்கு பெண்ணை கொடுத்தால் நாளை தன் பெண்ணை எப்படி காப்பாற்றுவார் என்று யோசித்து தற்போது தயக்கம் காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.