TRENDING
ரயிலில் பெண் செய்த கொடூர செயல் ? உறைந்த ரயில் பயணிகள்- நடந்தது என்ன?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பலரும் அறிந்த இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் ஒரு ரயிலில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கநிலம் ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது, பொது பெட்டி ஒன்றில் உள்ள கழிவறை சுமார் 3 மணி நேரமாக உள்பக்கம் தாழிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதை கவனித்த அந்த பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் ரயில்வே காவலரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, உடனடியாக ரயில்வே மெக்கானிக் பணியாளரை வரவழைத்து பூட்டை உடைத்தனர். அப்போது, 35 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால்,உடனே மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வந்து, அந்தப் பெண் மரணமடைந்திருப்பதை உறுதி செய்தார்.
மேலும், தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் விவரங்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ரயிலில் பயணித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைக்கான காரணம் தெரியாமல் போலீஸார் விரிவாக விசாரித்து வருகின்றனர்.