இந்த தடவ’.. விஜய் இல்ல’.. பாஜக-வை… “வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி”..? ‘மாஸ்டர் ‘இசை வெளியிட்டு’ விழா லீக்கான சர்ச்சை..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த தடவ’.. விஜய் இல்ல’.. பாஜக-வை… “வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி”..? ‘மாஸ்டர் ‘இசை வெளியிட்டு’ விழா லீக்கான சர்ச்சை..!

Published

on

கொரோனா பீதியால் மிகவும் எளிய முறையில் சென்னையில் நேற்று நடைபெற்றது தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய விஜய் சேதுபதி முதலில் கொரோனா வைரஸ் குறித்து பயப்பட வேண்டாம் என்று கூறினார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறி பேச ஆரமிச்ச விஜய் சேதுபதி நடிகர் விஜய் நல்ல மனிதர் என்று கூறினார்.

அதன் பின்னர் மாஸ்டர் படத்தில் நானும் ஹீரோதான் என்று விஜய் சேதுபதி கூறினார். மேலும் மதம் மனிதனுக்கு அவசியமில்லாதது என்று குறிப்பிட்ட விஜய் சேதுபதி மனிதனை மனிதன் தான் காப்பாற்ற வரவேண்டும் என்றும் கடவுள் வர மாட்டார் என்றும் கூறினார்.

கடவுளை காப்பாற்றுகிறேன் என்று கூறும் கும்பலிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருங்கள் என்றும், கடவுளுக்கு தன்னை காப்பாற்றி கொள்ள தெரியும் என்றும் விஜய் சேதுபதி கூறினார் விஜய் சேதுபதியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதனை கேட்ட ரசிகர்கள் இவர் மத்திய இந்துத்துவ பாஜகவை தான் மறைமுகமாக விளாசித்தள்ளுகிறார். விஜய் செய்துபோது என்று கூறிவந்தனர். இது விஜய் பேசும் வசனம்சி என்று சிலர் புலம்பி வந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in