CINEMA
யுவன் ஒரு டிரக் டீலர்.. மேடையில் ஓபனாக சொன்ன விஷ்ணு வர்தன்
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை புகழ்ந்து தள்ளியுள்ளார் விஷ்ணு வர்தன்.
விஷ்ணு வர்தனின் முதல் படமான ‘குறும்பு’வில் இருந்து நேசிப்பாயா வரை அனைத்து படங்களுக்கும் யுவன்தான் இசையமைத்துள்ளார். இருவருமே ஒரே பள்ளியில், கல்லூரியில் படித்தவர்கள். விழா மேடையில் பேசிய விஷ்ணு வர்தன், “யுவன்தான் எனக்கு மிகப்பெரிய பலம். எனது கெரியரில் முக்கிய பங்கு அவருக்கு இருக்கு. அவர் இல்லாமல் நான் இல்லை. அவருடைய இசை இல்லை என்றால் அவருடைய இசை இல்லை என்றால் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்காது. யாரும் அந்த படத்தை பார்க்க வந்திருக்க மாட்டார்கள்.
என்னுடைய படங்களுக்கு மிகப்பெரிய பலமே யுவன்தான். நான் என்னதான் கதை எழுதியிருந்தாலும், எடிட் பண்ணும்போது எனக்கே தெரியும், இந்த இடத்தில யுவன் இசையில் புகுந்து விளையாடுவார் என்று. அந்த வகையில் இந்த படத்திலும் யுவனின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. உங்களுக்கே தெரியும், ஒரு டிரக் டீலர், அவரை யாருக்குத்தான் பிடிக்காது. யுவனை எனக்கு எந்த அளவுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு அவர் டார்ச்சர். அவ்வளோ கோபமா பேசிட்டு இருப்பேன், விடு ப்ரோ பண்ணிரலாம்ன்னு அமைதியா, கூலா பேசுவான்” என யுவனை புகழ்ந்து தள்ளினார் விஷ்ணு.