CINEMA
‘விடாமுயற்சி’ விலகுணதால, ஒருவழியா 13 வருஷத்துக்கு அப்புறம் இந்த படம் ரிலீஸ் ஆகுது!
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலக்ஷ்மி, அஞ்சலி நடிப்பில் கடந்த 2012ல் தொடங்கப்பட்ட படம் “மத கஜ ராஜா”, சுருக்கமாக MGR. இந்த படத்திற்குப் பின் சுந்தர் சி 10 படங்களை இயக்கி முடித்துவிட்டார். இது வரலட்சுமிக்கு இரண்டாவது படமாக வரவேண்டியது. ஆனால், அவர் தற்போது வரை 45 படங்கள் நடித்து முடித்தது மட்டுமல்லாமல், அவருக்கு திருமணமே முடிந்துவிட்டது. ஆனாலும், படம் வந்தபாடில்லை. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது நீண்….ட முயற்சிக்குப் பின் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் ரேஸில் இருந்து அஜித்தின் ‘விடாமுயற்சி’ பின்வாங்கிய பின் பல படங்கள் பொங்கல் ரிலீசுக்கு வரிசையில் உள்ளன. அந்தவகையில் தற்போது “மத கஜ ராஜா” படத்துக்கும் ஒரு விடிவு பிறந்துவிட்டதாகவே தெரிகிறது. இந்த முறை படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்றே தெரிகிறது.