CINEMA
SK மீது பொறாமைப்படுவது சரியல்ல…. அவரு கஷ்டப்பட்டு வந்திருக்காரு – நெப்போலியன்…!!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து நெப்போலியன் பேசுகையில், ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா மேல உள்ள ஆசையால கடினமா உழைச்சு முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற பட்டத்தை வாங்கிருக்காரு. அதுக்காக அவரை பாராட்டனும். சினிமாவில் ஆரோக்கியமான போட்டியை மட்டுமே வச்சுக்கணும். அதை விட்டுட்டு சிவகார்த்திகேயன் மீது பொறாமைப்படுவது அல்லது அவர் குறித்து இழிவாக பேசுவது சரியில்லை என்று பேசியுள்ளார்.