CINEMA
எனக்கு அதை பார்த்தாலே ரொம்ப பயம்…. ஓப்பனாக போட்டுடைத்த ரெடின் கிங்ஸ்லி…!!

பிரபல நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லி நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து நெற்றிக்கண் டாக்டர், அண்ணாத்த, எதிர்க்கும் துணிந்தவன், பீஸ்ட் ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் 90-களில் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். தற்போது வா வரலாம் வா என்ற படத்தில், கங்குவா படத்திலும் ரெடின் கிங்ஸ்லி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில், எனக்கு நாய்ன்னா ரொம்ப பயம். நான் வளர்க்கிற நாய்க்கு பயப்பட மாட்டேன். தெரு நாய்க்கு தான் பயப்படுவேன். இப்போல்லாம் நாய் ரொம்ப மோசமாகிடுச்சி என்று கூறியுள்ளார்.