“தளபதிக்கு ஒரு பிரச்சனைனா நான் வருவேன்…” ஜனநாயகன்’ லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் அதிரடி… வைரலாகும் பதிவு…!! – cinefeeds
Connect with us

CINEMA

“தளபதிக்கு ஒரு பிரச்சனைனா நான் வருவேன்…” ஜனநாயகன்’ லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் அதிரடி… வைரலாகும் பதிவு…!!

Published

on

விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைத் துறையின் சிக்கல்களால் இன்னும் திரைக்கு வராமல் தவித்து வரும் நிலையில், அதன் முக்கியக் காட்சிகள் இணையத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் அறிமுகக் காட்சி மற்றும் ஒரு பாடல் உள்ளிட்ட சுமார் ஐந்து நிமிட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. தவெக தலைவர் விஜய், தனது அரசியல் வருகையைப் பிடிக்காதவர்கள் திட்டமிட்டு இத்தகைய இடையூறுகளைச் செய்வதாக ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்தப் படக் கசிவு படக்குழுவினரைக் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்கு ஆதரவாக முதல் ஆளாகக் களமிறங்கியுள்ளார். ஒரு திரைப்படம் என்பது நூற்றுக்கணக்கான கலைஞர்களின் ரத்தம் மற்றும் வியர்வையிலான உழைப்பு என்று நெகிழ்ந்த அவர், திருட்டுத்தனமாகப் படத்தைப் பார்ப்பதைத் தவிர்க்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இந்தச் சட்டவிரோதச் செயலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், திரையரங்கில் வெளியாகும் வரை காத்திருந்து உழைப்பை மதிக்க வேண்டும் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in