CINEMA
விஜய் பட ஹீரோயினா இது…? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை… லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!
கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரக்சிதா. தமிழில் சிலம்பரசனின் ‘தம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் ‘மதுர’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘பம்பரக் கண்ணு’ பாடல் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. கன்னடம் மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த இவர், 2007-ஆம் ஆண்டு இயக்குநரைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
திருமணத்திற்குப் பிறகு தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் புதிய அவதாரம் எடுத்த ரக்சிதா, கடந்த 19 ஆண்டுகளில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் எடை கூடியுள்ள அவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அரசியலில் பல கட்சிகளுக்கு மாறியும் தேர்தல் வாய்ப்பு கிடைக்காததால், தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ள அவர், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், இல்லத்தரசியாகவும் தனது வாழ்க்கையைத் தொடர்கிறார்.
