CINEMA
பாலா சார் கிட்ட அதை நான் எதிர்பாக்கல – மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர்கள் பலரும் எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர். நான் ராம் சாரின் உதவி இயக்குநர் என்பதால் எல்லாரும் என்னை பாராட்டுகிறார்கள் என்றே அப்போது நான் நினைத்தேன். அப்போது பாலா சார் என்னை சந்திக்க விரும்புவதாக என்னிடம் கூறினார்கள். அவர் எதற்காக என்னை அழைத்தார்? அவருக்கு படம் பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா என்ற கேள்வியுடன் அவரை சென்று சந்தித்தேன்.
அவரோட ரூமுக்குள்ள போனதுமே, கட்டி பிடிச்சுட்டு, தம் அடிப்பியான்னு கேட்டாரு. இல்லைனு சொன்னேன். தண்ணி அடிப்பியான்னு கேட்டாரு, அதுக்கும் இல்லன்னு சொன்னேன். நல்லது அப்படியே இருன்னு சொல்லிட்டு பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன் அப்படின்னு சொன்னாரு. அடுத்ததா என்ன சொல்லப்போறாருன்னு காத்திருந்தேன். டக்குனு ஒரு தங்க செயினை எடுத்து என் கழுத்துல போட்டு விட்டாரு. அவர் கிட்ட இருந்து நான் அந்த பரிசை எதிர்பாக்கல. அந்த தருணம் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
சமீபத்தில் நடந்த இயக்குநர் பாலாவின் 25 ஆண்டுகால சினிமா பயணம் விழாவில், அவருடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் மாரி செல்வராஜ்.