4 கல்யாணம் இல்ல…! “மொத்தம் 5 கல்யாணம் முடிஞ்சுச்சு”…. பேட்டியில் ஓப்பனாக பேசிய அஞ்சலி…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

4  கல்யாணம் இல்ல…! “மொத்தம் 5 கல்யாணம் முடிஞ்சுச்சு”…. பேட்டியில் ஓப்பனாக பேசிய அஞ்சலி…!!!

Published

on

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. தமிழில் குறுகிய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர். தற்போது அஞ்சலி 50-வது படமாக தெலுங்கில் கீதாஞ்சலி மல்லி வச்சுந்தி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அஞ்சலி எனது 50-வது படம் பிரத்தியேகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

#image_title

அதற்கு ஏற்றார் போல் இந்த திரைப்படம் இருக்கின்றது. தன்னை ஒவ்வொரு படியாக 50வது படம் வரை ஏற்றி ஏற்றுவிட்ட ரசிகர்களுக்கு மிக்க நன்றி என்று கூறியிருந்தார். மேலும் பத்திரிகையாளர் ஒருவர் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த அஞ்சலி எனக்கு திருமணம் என்ன பரவி வரும் வதந்திகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

#image_title

இதற்கு முன்பு நான்கு முறை எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இது 5- வது திருமணம். எனக்கு திருமணம் என்றால் உங்கள் அனைவரிடமும் நான் கூறுவேன். அது மட்டும் இல்லாமல் நான் யாரிடமும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதுவும் உண்மை கிடையாது என்று அந்த நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலி பேசி இருக்கிறார். 37 வயதாகும் அஞ்சலி தெலுங்கில் தற்போது மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கின்றார்.

Advertisement