CINEMA
நினைத்து பார்க்கமுடியாத வசூல் சாதனை செய்த புஷ்பா-2
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா-2’ படம் வசூலை குவித்து வருகிறது. சுகுமாரன் இயக்கியிருந்த இப்படம் புஷ்பா முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு மற்றும் திரைக்கதையின் வேகம் ஆகியவை இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. எதிர்பார்ப்புக்கு தீனிபோடும் வகையில் இரண்டாம் பாகமும் அமைந்துள்ளது.
படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மற்றும் ஸ்ரீ லீலாவின் நடனம் அமைந்திருந்தது. வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்தது இப்படம். அதிவேக 1,000 கோடி, அதிவேக 1,500 கோடி என பல்வேறு புதிய சாதனைகளை படைத்திருந்தது. தற்போது வரை இப்படம் 1,799 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ஓடிடி -யில் வெளியாவதற்கு இன்னும் சில நாள்கள் உள்ளதால் விரைவில் 2,000 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.