LATEST NEWS
விடுதலை 2 படத்தில் மலையாளத்து பைங்கிளியை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக்கிய வெற்றிமாறன்.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்..!!
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும்பாலான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த சூரியன் முதல் முறையாக விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக அசத்தியிருந்தார்.
இதில் விஜய் சேதுபதியும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் இந்த வருடம் இறுதியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதி முரட்டு சிங்கிளாக காட்டப்பட்ட நிலையில் இரண்டாம் பாகத்தில் வெற்றிமாறன் இவருக்கென ஒரு மலையாள பைங்கிளியை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் விசாரணை திரைப்படத்தின் நாயகனாக நடித்த தினேஷ் தற்போது விடுதலை 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பட பிடிப்பில் மஞ்சுவாரியார் மற்றும் தினேஷுடன் வெற்றிமாறன் எடுத்துக் கொண்ட திரைப்படம் தற்போது இணையத்தில் வீரராகி வருகிறது.
#Viduthalai2 Project 🔥#AttakathiDinesh | #ManjuWarrier
Directed By #Vetrimaaran 😎✨ pic.twitter.com/Uf7rxLWh6p— Saloon Kada Shanmugam (@saloon_kada) September 22, 2023