பழைய காதலியை எரித்து கொன்ற புது ஜோடி…! “கணவரை கொன்ற மனைவியை துடிதுடிக்க….” சினிமாவை மிஞ்சிய கொடூர சம்பவம்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பழைய காதலியை எரித்து கொன்ற புது ஜோடி…! “கணவரை கொன்ற மனைவியை துடிதுடிக்க….” சினிமாவை மிஞ்சிய கொடூர சம்பவம்….!!

Published

on

தெலங்கானா மாநிலம் கானாபூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரய்யா என்பவரின் மனைவி பார்வதம்மா (48). இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராமுலு என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களது முறைதவறிய உறவை கணவர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பார்வதம்மா, காதலன் ராமுலுவுடன் இணைந்து கடந்த 2016-ம் ஆண்டில் சந்திரய்யாவை படுகொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று வெளியே வந்த பிறகும் இருவரது ரகசிய உறவும் நீடித்தது.

குடும்பத்தினரின் எதிர்ப்பால் இருவரும் ஊரை விட்டு வெளியேறி கர்னூல் நகரில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்த நிலையில், அங்கு ராமுலுவுக்கு லட்சுமி என்ற மற்றொரு பெண்ணுடன் புதிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பார்வதம்மா, ராமுலுவிடமும் அவரது புதிய காதலியிடமும் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததோடு, ராமுலுவின் பெயரில் இருந்த வீட்டைத் தன் பெயருக்கு மாற்றித் தருமாறும் வற்புறுத்தியுள்ளார்.

Advertisement

பார்வதம்மாவின் தொல்லையிலிருந்து விடுபட நினைத்த ராமுலு, தனது புதிய காதலி லட்சுமியுடன் இணைந்து அவரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த 25-ஆம் தேதி இரவு பார்வதம்மாவை இருசக்கர வாகனத்தில் ஏற்றி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு மறைந்திருந்த லட்சுமியுடன் சேர்ந்து கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

பின்னர், மயங்கி விழுந்த பார்வதம்மாவை கத்தியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த ராமுலு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை லட்சுமியிடம் கொடுத்துவிட்டு, உடலை அருகில் இருந்த மக்காச்சோளக் குப்பைகளுக்கு நடுவே போட்டுத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார். மறுநாள் காலையில் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்ததைக் கண்ட விவசாயிகள் கொடுத்த தகவலின் பேரில் ஸ்ரீசைலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ராமுலு மற்றும் லட்சுமியின் கூட்டுச் சதி அம்பலமானதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in