LATEST NEWS
பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 படம்.. ரொமாண்டிக் பாடலுக்கு ரெடியாகும் ஹீரோ.. புதிய அப்டேட் கொடுத்த படக்குழு..!!

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஷூட்டிங்கை தொடர இயலவில்லை. அதன் பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்தியன் 2 படம் இரண்டு பாகங்களாக ஒரே சமயத்தில் உருவாகியுள்ளது.
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் ரகுல் ப்ரீத்தி சிங் ப்ரியா பவானி சங்கர் என்ற மூன்று கதாநாயகிகள் நடக்கின்றனர்.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சியை எடுக்க பட குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ரொமான்டிக் பாடல் காட்சியில் நடிகர் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து நடிக்க உள்ளார்களாம். இந்தியன் 2 படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.