LATEST NEWS
“குடும்பத்துடன் மும்பையில் செட்டிலான சர்ச்சை”… நான் அங்க போறதுக்கான காரணமே வேற.. நடிகர் சூர்யா ஓபன் டாக்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகின்றார். சூரரைப் போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் என சூர்யாவின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகின்றார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்தில் இரு வேறு கெட்டப்புகளில் சூர்யா நடித்து வருகின்றார். விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக பட குழுவினர் அனைவரும் வெளிநாடு செல்ல உள்ளனர்.
இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் ப்ரோமோ ஆகியவை கடந்த சில வாரங்களுக்கு முன்பே சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. என் நிலையில் நேற்று ரசிகர்களுடன் சூர்யா உரையாடிய நிலையில் அப்போது ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். அதற்கெல்லாம் பொறுமையாக பதில் அளித்த சூர்யா அடுத்ததாக சுதா கொங்கராவுடன் சூர்யா 43 திரைப்படத்தில் மற்றும் விடுதலை 2 திரைப்படத்தை நிறைவு செய்த பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறினார்.
இந்நிலையில் மும்பைக்கு அடிக்கடி சென்று வருவது குறித்தும் அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுவது குறித்தும் ரசிகர் ஒருவர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்த சூர்யா, தான் மும்பையில் செட்டில் ஆகி விட்டதாக தகவல்கள் பரப்பப்படுவதை சுட்டிக்காட்டிய சூர்யா தன்னுடைய குழந்தைகள் மும்பையில் தங்கி படித்து வருவதால் அவர்களை பார்ப்பதற்காகவே அடிக்கடி மும்பை செல்வதாக விளக்கம் அளித்தார். அதுமட்டுமல்லாமல் நான் எங்கேயும் போகலப்பா சென்னையில தான் இருக்கேன் என்று நகைச்சுவையுடன் சூர்யா பதிலளித்தார்.