ஒரே படத்தில் இணையும் ரஜினி, விஜய்.. அதுவும் இப்படி ஒரு படத்திலா?.. பரபரப்பான அப்டேட் கொடுத்த இயக்குனர் நெல்சன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே படத்தில் இணையும் ரஜினி, விஜய்.. அதுவும் இப்படி ஒரு படத்திலா?.. பரபரப்பான அப்டேட் கொடுத்த இயக்குனர் நெல்சன்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி  வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி  வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கும் யோசனை இருப்பதாகவும் அதனைப் போலவே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களின் இரண்டாவது பாகம் எடுக்கும் திட்டம் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ரஜினி மற்றும் விஜய் இருவரும் பெரிய மாஸ் நடிகர்கள் என்பதால் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் நேரம் வரும்போது அதனை செய்வேன் என்றும் நெல்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in