LATEST NEWS
நான் இவர தான் லவ் பண்றேன், கல்யாணமும் பண்ணிக்கணும்… முதல்முறையாக சீக்ரெட்டை உடைத்த தொகுப்பாளினி டிடி..!!

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாததால் விரைவில் விவாகரத்தில் முடிந்தது. தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார்.
தற்போது அதர்வா நடித்துள்ள மத்தகண் என்ற திரைப்படத்தில் டிடி நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி ஒரு சிறிய கேம் விளையாடி உள்ளார். அதில் ஹிருத்திக் ரோஷனை அதிகம் விரும்புவதாகவும், ஏ ஆர் ரகுமானை அடுத்த ஜென்மத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.