CINEMA
ஆத்தே 120 கோடி…! சூர்யா சொந்தமாக தனி விமானம் வாங்கியுள்ளாரா…? தீயாய் பரவும் தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் சூர்யா. இவருடைய நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வரலாற்று கதை அம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதம் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இவருடைய தயாரிப்பில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் சூர்யா தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாகவும் இதனுடைய விலை 120 கோடி ரூபாய் என்றும் தகவல் பரவி வந்தது. இதற்கு சூர்யா தரப்பில் இது முற்றிலும் வதந்தி என்றும் கூறப்பட்டுள்ளது. சூர்யா தனி விமானம் வாங்கி உள்ளார் என்று எதிர்மறையான கருத்துக்கள் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.