#வாழை: கூலித் தொழிலாளர்களின் வலியைக் கடத்துகிறதா…? படத்தின் விமர்சனம் இதோ…!! - cinefeeds
Connect with us

CINEMA

#வாழை: கூலித் தொழிலாளர்களின் வலியைக் கடத்துகிறதா…? படத்தின் விமர்சனம் இதோ…!!

Published

on

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் மாரி செல்வராஜின் சிறுவயதில் நடந்த விஷயங்களை சொல்லியிருப்பார்.

இந்த படத்தை மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தயாரிக்கிறார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இதற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. சுவையான வாழைப்பழத்தின் சுவையை மட்டுமே அறிந்தவர்களுக்கு அதன் தார்களை தூக்கிச் சுமக்கும் கூலிகளின் கசப்பான வாழ்க்கையை இயக்குனர் மாரி செல்வராஜின் ‘வாழை’ படம்பிடித்து காட்டியுள்ளது.

Advertisement

வறுமையின் காரணமாக பள்ளி விடுமுறை நாள்களில் வாழைத்தார் சுமக்கும் பால்யம், சமூக ஏற்றத்தாழ்வு என்று கூலி வாழ்க்கையின் ரணத்தை தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், நடிகர்களின் எதார்த்தமான நடிப்பும் படம் பார்ப்பவர்களின் மனதிலும் ஏற்படுத்துகிறது.

Advertisement