CINEMA
#RIP: பிரபல தயாரிப்பாளர் திடீர் மாரடைப்பால் காலமானார்…. சோகத்தில் திரையுலகம்…!!
ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், ஆகிய படங்களை தயாரித்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு இன்று திடீர் மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10.30 மணியளவில் உடல் கொண்டுவரப்பட்டு, மாலை 4.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
தமிழ் திரையுலகில் பல முக்கிய படங்களை தயாரித்தவர் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் டில்லி பாபு. இவருடைய மறைவிற்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.